சிவகங்கையில் உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா – உறவினர்களை நெகிழ வைத்த தாயின் செயல்!

சிவகங்கையில் உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மே 12ம் தேதி அன்னையர் தினத்தை மக்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு தாய் செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அதாவது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாண்டிச்செல்வி என்ற மாணவி மூன்று வருடங்களுக்கு முன்னர் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக  உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பாண்டிச்செல்வி யின் தாயார் ராக்கு  அன்னையர் தினத்தையொட்டி பூப்புனித நீராட்டு விழா நடத்தி வைத்துள்ளார். தனது மகளின் உருவ படத்தை கொண்டு கட் அவுட்டை வைத்து விழாவை நடத்தியுள்ளனர். மேலும் பாண்டி செல்விக்கு ஆபரணங்கள் அணிவது பிடிக்கும் என்பதால் இந்த கட் அவுட்டுக்கு ஆபரணங்கள் அணிய பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விழாவிற்கு தனது சொந்த பந்தங்களை அழைத்து விருந்து வைத்துள்ளார் ராக்கு. இப்படி இறந்த மகளுக்கு தாய் செய்த காரியம் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

இனி பெண்கள் ரெட் லிப்ஸ்டிக் & ஜீன்ஸ் போட்டால் தண்டனை தான் – அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!

Leave a Comment