2ம் திருமணம் செய்து கொண்ட சித்தார்த்தின் மாஜி மனைவியை பார்த்துள்ளீர்களா?.., புகைப்படம் உள்ளே!!!

சித்தார்த் முதல் மனைவி

தென்னிந்திய தமிழ் சினிமாவுல எத்தனையோ சாக்லெட் பாய் நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் ரொம்ப முக்கியமானவர் தான் நடிகர் சித்தார்த். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த, இவர் இதற்கு முன்னர் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் அவர் கடந்த 10 வருடங்களாக பிரபல நடிகை  அதிதி ராவ்-வை காதலித்து வருகிறார்.

அவருடன் சேர்ந்து சித்தார்த் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், இன்று அவரை யாருக்கும் தெரியாமல் தெலுங்கானாவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு வட்டாரம் தெரிவிக்கிறது. இது சித்தார்த்-க்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சித்தார்த்தின் முதல் மனைவி யார் என்று பலரும் சோசியல் மீடியாவில் தேட தொடங்கி விட்டனர்.

அதன்படி சித்தார்த் தனது முதல் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக  பரவி வருகிறது.  இவர் மேக்னா என்பவரை காதலித்து கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

பொது தேர்வில் குளறுபடி.., இந்த 12ம் வகுப்பு தேர்வு மீண்டும் நடைபெறும்.., வெளியான் முக்கிய அறிவிப்பு!!!

Leave a Comment