கோவையில் பிளஸ் 2 மாணவன் கார் ஓட்டி விபத்து – மேற்கு வங்க தொழிலாளி உயிரிழப்பு!
Breaking News: கோவையில் பிளஸ் 2 மாணவன் கார் ஓட்டி விபத்து: புனேவில் மதுபோதையில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அதே போல் தமிழகத்தின் முக்கிய மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அதாவது, கோவையில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவன் 18 வயது நிரம்பாத நிலையில் கார் ஓட்டி பழகி வந்துள்ளார்.
கோவையில் பிளஸ் 2 மாணவன் கார் ஓட்டி விபத்து
கிரவுண்ட் உள்ளிட்ட பகுதிகளிலோ அல்லது ஆள் இல்லாத இடங்களில் ஒட்டி பழகி வந்த மாணவன் ஒரு கட்டத்தில் தான் நன்றாக பழகி விட்டதாக நினைத்து கொண்டு எப்பவும் பிசியான சாலையாக இருந்து வரும் கோவை பீளமேடு பகுதியில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மாணவன் அப்பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது பாலம் கட்டும் பணிகள் அப்பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், மாணவர் ஓட்டிய கார் அதிவேகமாக வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வயதான அக்சய் வேரா என்ற இளைஞன் மீது மோதியது.
Also Read: கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி – தென்மேற்கு பருவமழை காரணமாக நேர்ந்த கொடூரம்!!
இதில் அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் மாணவர் ஓட்டி வந்த கார் செண்டர் மீடியனில் மோதி தீப்பிடித்தது.
இதில் அந்த மாணவன் சிறிய காயங்களுடன் தப்பினார்.
இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து மாணவனின் தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு – 4 பேர் அதிரடி கைது
ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம்
கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?