Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!

கோயம்புத்தூர் மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள நிரந்தர முழு நேர காவலர் பணியிடத்திற்கு கீழ் கண்ட தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Coimbatore Statistics office Recruitment 2025

பதவியின் பெயர்: நிரந்தர முழு நேர காவலர்

ஊதிய விகிதம்: நிலை-1 (ரூ.15,700-58,100)

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்விதகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள். .கட்டாயம் தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க
வேண்டும். விண்ணப்பதாரர்கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு

வயது வரம்பு (01-07-2025 அன்றைய நிலையில்)

குறைந்தபட்ச வயது – 18 வயது (01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்)

அதிகபட்ச வயது – 37 வயது

விண்ணப்பிக்கும் முறை:

நிரந்தர முழு நேர காவலர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்கள் இவ்வலுவலக வேலை நாட்களில் நேரில்
பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 18.08.2025 முதல் 02.09.2025 பிற்பகல் 5.45 க்குள் கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலமாக மட்டுமே கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.. காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்ப படிவம்

விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

மண்டலப்புள்ளிஇயல் இணை இயக்குநர்,
மண்டலப் புள்ளிஇயல் அலுவலகம்,
முதல் தளம், பழைய கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கோயம்புத்தூர்-18.
தொலைபேசி எண் : 0422-2303686.

Also Read: LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!

குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, சாதிச்சான்று, இருப்பிடச் சான்று நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் ( call letter) அவரவர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Leave a Comment