காதலுடன் சரக்கு சாப்பிட்ட மாணவி.., காலையில் நடந்த டிவிஸ்ட்.., போதை பழக்கத்தால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
ஊட்டியில் முக்கிய பகுதியான பாம்பே கேசில் என்ற இடத்தை சேர்ந்த ஆகாஷ்(20) என்ற இளைஞன் தனது அப்பா, அம்மாவை விட்டு விலகி பாட்டியுடன் வசித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வரும் இவர், கோவை தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வரும் ரிதி ஏஞ்சல் (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலிக்கு வார விடுமுறை என்பதால் மாணவன் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான். அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். இது போக ஆகாஷ் பைன் பாரஸ்ட் என்ற பகுதிக்குச் சென்று மேஜிக் காளானை வாங்கி வந்த நிலையில், அதையும் காதலியுடன் பகிர்ந்து சாப்பிட்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஒரு கட்டத்தில் இருவருக்கு போதை தலைக்கேறிய நிலையில், இருவரும் உட்கார்ந்த இடத்திலேயே படுத்து தூங்கிவிட்டனர். அடுத்த நாள் காலையில் ஆகாஷ் எழுந்து உட்கார்ந்த நிலையில், காதலி ரிதி ஏஞ்சல் எந்திரிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து, அந்த மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.