திருச்சி NIT மாணவியிடம் பாலியல் அத்துமீறல் – மாணவர்கள் தொடர் போராட்டம் – வார்டன் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் !

தற்போது திருச்சி NIT மாணவியிடம் பாலியல் அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து வார்டன் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருச்சியில் உள்ள என்.ஐ.டி மாணவிகள் விடுதியில் மாணவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் பணிக்கு சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில் ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது ஊழியர் ஒருவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தமிட்டுள்ளார்.

அதன் பின்னர் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டு நேற்று இரவே திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து என்.ஐ.டி வளாகத்தில் இரவும் முதல் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் 5 ஆண் ஊழியர்கள் மாணவர்களின் அறைக்கு இணையதள சேவை அளிக்க வரும் போது விடுதி காப்பாளர்கள் உடன் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் மாணவிகள் அறைக்குத் தனியாக ஆண் ஊழியர்களை அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அதன் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது அதனால் விடுதி காப்பாளர்கள் மூன்று பேரும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி என்.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை மரியாதையாகவும், பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகவும் கல்லூரி நிர்வாகம் நடத்தியதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

கோவையில் ரூ 150 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை – முதல்வர் முக ஸ்டாலின் ஒப்பந்தம்!

இந்நிலையில் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த திருச்சி மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் என்.ஐ.டிக்கு நேரில் சென்று நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அநாகரீகமாகப் பேசிய விடுதி காப்பாளர் பேபி மன்னிப்பு கேட்டார்.

இதனையடுத்து மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.

Leave a Comment