குக் வித் கோமாளி பிரபலத்துக்கு கிடைத்த Golden Opportunity – ரசிகர்கள் வாழ்த்து மழை!

குக் வித் கோமாளி பிரபலத்துக்கு கிடைத்த Golden Opportunity: விஜய் டிவியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதுவரை 4 சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது 5வது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசன் மூலம் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கிய நிலையில் செஃப் தாமோதரனும் நடுவராக இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி இந்த ஷோவின் முக்கிய நங்கூரமாக இருந்து வருபவர்கள் தான் கோமாளிகள். இந்த சீசனில் புதிதாக கோமாளிகள் ஷபி ஷப்னம், ஃபரீனா ஆசாத், திடியன், அறந்தாங்கி நிஷா, ரோபோ சங்கர், வைஷாலி கேம்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் அனைவரது மத்தியில் பேவரைட் கோமாளி என்று பெயர் வாங்கியவர் தான் வைஷாலி கேம்கர். இந்நிலையில் வைஷாலி கேம்கருக்கு கோல்டன் ஆப்பூருன்னுச்சுட்டி கிடைத்திருக்கிறது. அதாவது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் வைஷாலி கேம்கர் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம்.

Also Read: கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் – வெளியான அதிரடி அறிவிப்பு!!

இந்த படத்தில் நடிகர் கவினும் லீடு ரோலில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழையும் வைஷாலி கேம்கருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும்  கெமி,  வீடியோ ஜாக்கி, ரேடியோ ஹோஸ்ட், மாடல், பைக்கர் என பல திறமைகளை வெளிக்காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment