குக் வித் கோமாளி 5 ஷோவுக்கு வந்த பிரபலம் – செம குஷியில் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. ப்ரோமோ இதோ!

Vijay TV: குக் வித் கோமாளி 5 ஷோவுக்கு வந்த பிரபலம்: தற்போது ரசிகர்களின் பேவரைட் ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 5 சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்து போட்டியாளர்கள் எலிமினேட்டாகி போகி கொண்டிருக்கும் நிலையில், கடைசியாக அனைவருக்கும் பிடித்த போட்டியாளரான  ஷாலின் ஷோயா வெளியேற்றப்பட்டார். Actress Shaalin Zoya

இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கின. இதனை தொடர்ந்து அடுத்து யாரு எலிமினேட் ஆக போகிறார்கள் டைட்டிலை யார் அடித்து தூக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. ஷோ தொடக்கத்தில் டிஆர்பி குறைவாக இருந்தாலும் கூட எபிசோடு போக போக டிஆர்பி உச்சத்தில் இருந்து வருகிறது என்று கூட சொல்லலாம். vijay tv

இந்நிலையில் குக் வித் கோமாளி ஷோவுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்த பிரபலம் குறித்து இந்த வாரத்திற்கான புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஸ்பெஷல் போலீஸாக குக் வித் கோமாளி 5 செட்டுக்கு மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் ஷாலின் ஷோயா. cooku with comali season 5

Also Read: ஹெல்மெட் இல்லாமல் புல்லட் ஓட்டிய பிரசாந்த்.. அதிரடி காட்டிய போலீஸ்.. இதெல்லாம் தேவையா கோபால்!

அவரை திரும்பவும் செட்டுக்குள் பார்த்த கோமாளிகள் மற்றும் போட்டியாளர்கள் சந்தோஷத்தில் வாயடைத்து துள்ளிக் குதிக்கிறார்கள்.

குறிப்பாக ஷாலின் ஷோயாவை பார்த்ததும் குரேஷி என்ன ரியாக்சன் கொடுப்பது கூட தெரியாமல் பேச்சு வராமல் இருந்துள்ளார். இதோ அந்த ப்ரோமோ, 

Leave a Comment