கோவாக்சின் போட்டவர்களுக்கு பக்க விளைவு – அடக்கடவுளே இந்த நோயால் பாதிப்பா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

கோவாக்சின் போட்டவர்களுக்கு பக்க விளைவு: உலக நாடுகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே மக்களின் உயிரை காப்பாற்றும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது கொரோனா தடுப்பூசி தான். அதாவது கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்டு என்ற தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டது. இதனால் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தற்போது பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் இன்னும் ஒரு சில பகுதிகளில் கொரோனா வைரஸ் வீரியம் எடுத்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக  கோவிட் ஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் மக்கள் பயப்பட தொடங்கிவிட்டனர் . தற்போது கோவாக்சின்  தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்க விளைவுகள் வருவதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிவித்துள்ளது. அதாவது கோவாக்சின்  தடுப்பூசி போட்டவர்களுக்கு 30 சதவீதம் மேலானோருக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு ஆண்டுக்கு பிறகு தோல் தொடர்பான பிரச்சனைகளும், நரம்பு மண்டல சம்பந்தமான பிரச்சனைகளும் ஏற்படும் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் சற்று பீதியில் இருந்து வருகின்றனர். கோவாக்சின் போட்டவர்களுக்கு பக்க விளைவு – covaxin side effects after one year

எல்லையை தாண்டிய படகுகள் – இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது – நடந்தது என்ன?

Leave a Comment