CSK Vs GT 2024.., ஆட்டத்தை டோட்டலா சேஞ்ச் செய்த தல தோனி.., சேப்பாக்கத்தில் 2-வது முறையாக அபார வெற்றி!
CSK Vs GT 2024
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், அதிரடியாக பேட்டிங் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் கிட்டத்தட்ட 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதில் ஓப்பனிங் சிறப்பாக விளையாடிய சச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலா 46 ரன்களும், அடுத்து இறங்கி எல்லா பந்துகளையும் சிக்ஸர் பறக்கவிட்ட சிவம் துபே 51 ரன்களும் குவித்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதையடுத்து, களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தனர். சென்னை அணிக்கு இது இரண்டாவது வெற்றி என்பதால் தற்போது சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. வழக்கம் போல் தோனி இந்த போட்டியிலும் இறங்கவில்லை. இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு குஷி படுத்தும் விதமாக பீல்டிங்கில் தோனி செய்த சாகசங்களை பார்த்த ரசிகர்கள் சந்தோஷம் அடைந்தனர். அவர் பாய்ந்து பிடித்ததை பார்த்த ரசிகர்களின் கண்களுக்கு பந்தை சிறுத்தை போல் தோனி பாய்ந்து இரு கைகளாலும் கேட்ச் பிடித்தது போல் இருந்தது என்று ஆச்சரியம் பட்டுள்ளனர்.