சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் – முழு தகவல் இதோ !

ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் புதிய சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபூர்வாலாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் 23 ஆம் தேதி தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவனை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.

அந்த வகையில் கடந்த மே மாதம் 24 இல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர் மகாதேவன் பதவியேற்றார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 34 இடங்களில் இரண்டு காலிப்பணியிடங்கள் இருந்ததை தொடர்ந்து, அந்த 2 இடங்களை நிரப்புவதற்காக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங் ஆகிய இருவர் பெயர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன குழுவான கொலிஜியம் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தற்போது நியமனம் செய்யப்பட்டனர்.

தமிழக உள்துறை செயலாளர் உட்பட 15 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு அதிரடி உத்தரவு!!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் இன்று நியமனம் செய்யப்பட்டார்.

Leave a Comment