TNSLRM Community Development Trainer Recruitment 2025: திண்டுக்கல் மாவட்டம் 2025-26-ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் (CMTC) காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளராக பணி அமர்வு செய்திட தகுதியான சுய உதவிக்குழு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் www.dindigul.nic.in என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் 10.09.2025 முதல் 17.09.2025 வரை மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
TNSLRM Community Development Trainer Recruitment 2025
குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தது இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறக் இருந்தால் மட்டும் போதுமானது.
சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க
வேண்டும்.
மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும்.
கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
Also Read: வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
சமுதாய வளப் பயிற்றுநராக விண்ணப்பிக்கும் போது சார்ந்த சுய உதவிக் குழு வாராக்கடன் நிலை இல்லாது இருக்க வேண்டும்.
சமுதாய வளப் பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பு இருத்தல் வேண்டும்.
அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ (அ), பகுதி நேரமாகவோ பணிபுரிபராகவோ இருக்கக் கூடாது.
விண்ணப்பதாரர் : தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மானம் நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். (சமுதாய வளப் பயிற்றுநர் மாதிரி விண்ணப்படிவம் இணைப்பு-1)
பயிற்சி நடைபெறும் போது மட்டும் பயிற்சி நடத்தியதற்கான மதிப்பூதியம் வழங்கப்படும்.
மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படாது.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
ஒப்பந்த பணியாளராக பணியமர்வு செய்வதால் பணி நிரந்தரம் குறித்து உரிமை கோர முடியாது.
Official Notification | Click Here |
Application Form | Download |
தொடர்புக்கு :
- மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண்:0451 – 2460050
- உதவி திட்ட அலுவலர் (CBO), அலை பேசி எண்.:99442 33895