அடக்கடவுளே.., திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை., கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்? பின்னணி என்ன?

தற்போது எல்லா கட்சிகளிலும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுகவை சேர்ந்த பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கோவை மேற்கு மாவட்ட பகுதியில் அதிக செல்வாக்கு பெற்ற திமுக நிர்வாகியாக திகழ்ந்தவர் தான் ஆர்.கிருஷ்ணன் (எ) பையா கவுண்டர். இவர் கடந்த 2021 ஆண்டு நடந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக  அரசியலில் இருந்து விலகினார்.

இந்நிலையில் நேற்று அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவருடைய குடும்பத்தினர் அவரை காப்பாற்றி உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை முயன்றதாக தெரிய வந்துள்ளது.

அம்மாடி.., என்னா பிடி.., சொல்லி அடித்த அபி சித்தர்., கீழக்கரை ஜல்லிக்கட்டில் முதல் பரிசு என்னனு தெரியுமா?

Leave a Comment