மாஜி அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் திடீர் இ.டி ரெய்டு.., கடும் அதிர்ச்சியில் அதிமுக கட்சியினர்!!

இ.டி ரெய்டு

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் களம் தீயாக இருந்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் கடந்த சில நாட்களாக முக்கிய புள்ளிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை 3 வாகனங்களில்  வந்த அதிகாரிகள் சோதனை அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் அவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, அப்போது கிடைத்த ஆவணங்களை காரணமாக காட்டி தான் இன்று அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். இங்கு மட்டுமின்றி சென்னை தரமணியில் உள்ள ஐ.டி நிறுவனத்திலும் அமலாக்கத்துறையினர்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் நிலையில்  அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்கள் ஜூனியஸா?., அப்ப இந்த படத்துல எத்தனை முகங்கள் இருக்கு?., 10 வினாடிகளில் கரெக்டா சொல்லுங்க பார்க்கலாம்?

Leave a Comment