பொறியியல் படிப்பு 2024  – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!!

engineering course: பொறியியல் படிப்பு 2024  – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு: தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 450-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளாக மே 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

அதன்படி 2,53,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். அதில் 1,98,853 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி  முதல் 30ம் தேதி வரை மாணவர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் இணையவழி வாயிலாக சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை (ஜூலை 10) வெளியிடப்படவுள்ளது. அதாவது சென்னை கிண்டியில் இருக்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரகத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிடவுள்ளார்.

Also Read: விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை – கட்டன்ட் ரைட்டாக சொன்ன மாவட்ட ஆட்சியர்!!

அதன்பின்னர் மாணவர்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான இணையவழி கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Leave a Comment