இ- பாஸ் நெறிமுறை இன்று வெளியீடு ! சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கான நெறிமுறைகள் வெளியாகும் என தகவல் – முழு அறிவிப்பு இதோ !

இ- பாஸ் நெறிமுறை இன்று வெளியீடு.கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் அனைவரும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக வழக்கத்திற்கு மாறாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு இ- பாஸ் முறையை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை தெரிவித்திருந்தது. அந்த வகையில் இ- பாஸ் நெறிமுறைகள் இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ- பாஸ் நெறிமுறைகள் இன்று வெளியாகிறது. மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இ- பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எக்குத்தப்பாக எகிறிய தங்கம் விலை – ஒரு பவன் இவ்வளவு ரூபாயா? கலக்கத்தில் மக்கள்!!

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு இ- பாஸ் அளிக்க ஏதுவாக தகவல் தொழில்நுட்ப துறையின் சார்பில் இணையதளம் உருவாக்கப்படும் என்றும், ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் அனுமதிக்கப்படும் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் போன்றவை வெளியாக வாய்ப்பு.

Leave a Comment