FASTAG வருடாந்திர பாஸ் திட்டம்:
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த ‘பாஸ்டேக்’ முறையில் வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் அடிப்படையில் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனாளரின் வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த முறை கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
All Jobs 2025 – தகுதி: 5th 8th 10th 12th Degree
இதனையடுத்து நெடுஞ்சாலை பயணங்களை இன்னும் எளிதாக்க பாஸ்டேக் விதிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருடாந்திர பாஸ் முறை:
அந்த வகையில் வருடத்திற்கு ரூ.3000 செலுத்தி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் மற்றும் மாநில விரைவுச் சாலைகளில் ஆண்டு முழுவதும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த “வருடாந்திர பாஸ்” முறையில் இந்தியா முழுவதும் பயணிக்க FASTag ரீசார்ஜ்கள் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயண தூர அடிப்படையில் விலை நிர்ணயம்:
100 கி.மீ.க்கு 50 ரூபாய் என்ற நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். இது அடிக்கடி பயணம் செய்யாதவர்களுக்கு ஏற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் FASTag திட்டம் நீக்கம்:
இதனையடுத்து 30,000 ரூபாய் கட்டணம் செலுத்தி 15 ஆண்டுகளுக்கு பயணிக்கும் வாழ்நாள் FASTag திட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள்:
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000
- Madurai DCPU குழந்தைகள் நலதுறை வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- ISRO Technician Pharmacist வேலைவாய்ப்பு 2025! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | ₹92,300 சம்பளம் வாங்கலாம்!
- 10வது படித்திருந்தால் NIA தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 – MTS, உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!
- வேலூர் DSWO Gender Specialist வேலைவாய்ப்பு 2025! சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை காலியிடங்கள் | தொகுப்பூதியம் 21,000/-