திரைப்பட கல்வி இலவச பயிற்சி திட்டம் ! பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவியாக இருக்கும் – வேல்ஸ் ஐசரி கணேஷ் மற்றும் வெற்றிமாறனின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் !

திரைப்பட கல்வி இலவச பயிற்சி திட்டம். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் மற்றும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் மற்றும் இடக்குனர் வெற்றிமாறன் இருவரும் இணைந்து சினிமாத்துறையில் ஆர்வமுள்ள பொருளாதார சூழ்நிலையில் பின் தங்கிய மாணவர்களை மேம்படுத்தும் வகையில் திரைப்பட கல்வி இலவச பயிற்சி பெறுவதற்கான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சினிமாத்துறையில் ஆர்வமுள்ள வர்களை ஊக்கப்படுத்தும் வகையில் திரைப்பட கல்வி பயிற்ச்சியை இலவசமாக வழங்க வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் சர்வதேச திரைப்படம் மற்றும் கலாச்சார நிறுவனம் ( IIFC ) சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அத்துடன் இந்த இலவச கல்வி திட்டத்தினை செயல்படுத்தப்பபோவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளை நடக்கவிருக்கும் நீட் தேர்வு 2024- மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

அந்த வகையில் இந்த திட்டமானது திரைத்துறையில் ஆர்வம் கொண்ட மட்டும் ஏழை மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எளிதில் பயன் பெற்று வாழ்வில் முன்னேறுவதற்கான அடிப்படையாக இந்த திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment