Fishing Ban: இன்று முதல் அடுத்த 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை – அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்!!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்குகிறது. கிட்டத்தட்ட 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் மீன் வளம் குறைந்து விடும் என்பதால் 2 மாத காலத்துக்கு மீன் பிடிக்க தடைவிதிக்கப்படுவது வழக்கம். அதாவது கடல் சார்ந்த உயிரினங்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தனது இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும். எனவே இந்த வருடம் மீன்பிடித்தடை காலம் இன்று முதல் தொடங்க இருக்கிறது. எனவே இன்று  ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை, அதாவது 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆழ்கடலுக்குள் சென்றுள்ள படகுகள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ் கடலில் சென்று மீன் பிடிப்பதற்கு தடை என்பதால் மீன்களின் வரத்து வெகுவாக குறையும். இதனால் சந்தைகளில் மீன் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் விலை கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல கூடாது என்று தெரிவித்து உள்ளனர்.

Election Update: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியம் – ரூ.58.5 கோடியை அதிரடியாக ஒதுக்கிய அரசு!!

Leave a Comment