அதிமுகவில் நடிகை கவுதமிக்கு புதிய பதவி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

தற்போது அதிமுகவில் நடிகை கவுதமிக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளராக கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் பாஜவில் இருந்த நடிகை கவுதமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து மக்களவை தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரியில் அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் நடிகை கவுதமிக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த தடா பெரியசாமிக்கு எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Gautami AIADMK Policy Propagation Deputy General Secretary – Edappadi Palaniswami Announce

அந்த வகையில் மக்களவைத் தேர்தலில் சீட் வழங்காததால் பாஜகவிலிருந்து விலகி தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அதிமுக சிறுபான்மையினர் நல துணைச் செயலாளராக ஃபாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சன்னியாசி விடுவிக்கப்பட்டு அதிமுக விவசாய பிரிவு துணைச் செயலாளராக பி.சன்னியாசி தற்போது நியமனம் செய்யபப்ட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment