மேக்ஸ்வெல் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகல் – என்ன காரணம் தெரியுமா? – அதிர்ச்சியில் RCB ரசிகர்கள்!!

மேக்ஸ்வெல் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகல்: நடப்பாண்டு ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடும் 10 அணிகளும் வெற்றிக்காக போராடி வருகின்றன. குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து சீசன் ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. சொல்ல போனால் RCB அணிக்காக விராட் கோலி மட்டுமே உயிரை கொடுத்து ஆடி வருகிறார் என்று தொடர்ந்து பல பேர் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி RCB அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் 6 போட்டிகளிலும் அதிக பட்சமாக 32 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி மூன்று முறை டக் அவுட்டும் ஆகியுள்ளார். அதாவது அவர் விளையாடிய 6 இன்னிங்ஸில் ஸ்கோர் 0,3,28,0,1,0 ஆக மட்டுமே இருந்துள்ளது. இதனால் மேக்ஸ்வெல்லை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் மேக்ஸ்வெலுக்கு பதிலாக வில் ஜாக்ஸ் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கேப்டன் ஃபாஃப் டுபிளெசிஸிடம் மேக்ஸ்வெல் கூறியதாவது, ” சீசன் ஆரம்பித்த முதல் போட்டிகளில் தனிப்பட்ட முறையில் எனக்கு சிறப்பாக அமையவில்லை.  தொடர்ந்து நான் இப்படி விளையாடி வந்தால் எனது வாழ்க்கை குழிக்குள் தள்ளப்படும். எனவே எனக்கு பதில் வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். . நான் இதற்கு முன்பு இந்த சூழ்நிலையில் இருந்திருக்கிறேன். எனவே எனக்கு  மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஓய்வு அளிக்க இதுவே சிறந்த நேரம். அதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாட போவதில்லை என்று கூறியுள்ளார்.

எலான் மஸ்கின் அடுத்த நடவடிக்கை – இனி இந்த விஷயத்துக்கும் கட்டணம்? – அதிர்ச்சியில் பயனர்கள்!!

Leave a Comment