தேர்தலில் போட்டியிடும் கிரேட் காளி ! சொந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்த பாஜக – எதிரிகளை ஒரே அடியில் வீழ்த்தும் கிரேட் காளி தேர்தலில் வெற்றி பெறுவாரா ?

தேர்தலில் போட்டியிடும் கிரேட் காளி. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி செயல்பட்டுவருகின்றன. வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணிக்கட்சிகளின் தொகுதி பங்கீடு போன்ற செயல்பாடுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிமைக்க வேண்டும் என்ற நோக்கில் பல நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கி வருகிறது அந்த வகையில்

வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் கிரேட் காளி போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட மல்யுத்த நிகழ்ச்சி தான் WWE. இந்த போட்டிகளில் கலந்து கொண்டு எதிரிகளை ஒரே அடியில் வீழ்த்தியவர் தான் கிரேட் காளி இதனால் அவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. மேலும் இவ்வாறு புகழ் பெற்ற கிரேட் காளியின் சொந்த மாநிலம் ஹிமாச்சல் பிரதேசம் ஆகும்.

ஓபிஎஸ் அணிக்கு தொகுதி இல்லை?.., பாஜக வச்ச ஆப்பு?.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

இதன் அடிப்படையில் அவரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் தோடா தொகுதியில் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவிர்த்துள்ளது. இதனையடுத்து தனது வேட்புமனுவை கிரேட் காளி தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment