குஜராத்தில் 173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் – இரண்டு பேர் அதிரடி கைது!
குஜராத்தில் 173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்: குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிக அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து குஜராத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறது.
குஜராத்தில் 173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்
இதனை தொடர்ந்து குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்களை கண்டு பிடித்தனர். அப்போது பல கோடி மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இன்று கடல் வழியாக போதைப் பொருளை கடத்திய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம் – என்ன காரணம் தெரியுமா?
அதாவது, குஜராத் கடல் பகுதியில் இருந்து 173 கிலோ போதைப் பொருளை கடத்த முயற்சித்த போது போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மடக்கி பிடித்தனர். மேலும் போதை பொருள் கடத்த பயன்படுத்திய இந்திய மீன் பிடிக்கும் படகில் இருந்த 2 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். நேற்று 86 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!