ஹத்ராஸ் விவகாரம் – முதல் முறையாக மவுனம் கலைத்த போலே பாபா சாமியார் – வீடியோ வைரல்!
ஹத்ராஸ் விவகாரம்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் சமீபத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா நடத்திய ஆன்மிகக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை முடித்து மக்கள் வீடு திரும்பிய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 100 க்கும் ஏற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹத்ராஸ் விவகாரம்
இதனை பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கூட்டத்தை நடத்திய ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா தலைமறைவான நிலையில், அவரை போலீஸ் தேடி வருகிறது. இந்நிலையில் போலே பாபா வீடியோ வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “ சமீபத்தில் நடந்த ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட சம்பவத்திற்குப் நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த கொடூரமான வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் எங்களுக்குத் தரட்டும். மேலும் அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். இது சம்பவம் தொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்துவர் எவரும் தப்பிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
Also Read: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? – வெளியான முக்கிய அறிவிப்பு!
மேலும் என்னுடைய வழக்கறிஞர் ஏ.பி. சிங் மூலம், கமிட்டியின் உறுப்பினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் நின்று அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்