பெண்களுக்கு அடித்த லாட்டரி.., இனி மாதம் ரூ. 1500 கன்பார்ம்.., அரசு போட்ட அசத்தல் திட்டம்!
அரசு போட்ட அசத்தல் திட்டம்
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை அரசு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில், முதல்வர் தாக்கூர் சுக்விந்தர் சிங் சுகு இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டத்தை இன்று முதல் ஆரம்பித்து வைத்தார். எனவே இந்த திட்டத்தின் படி, லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லா மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.1500 ஓய்வூதியம் வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 2.37 லட்சம் பெண்கள் பயன்பெற இருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளும் திருமண வயது 18-ஆக இருந்த நிலையில் 21 ஆக உயர்த்திய நாட்டிலேயே முதல் மாநிலமாக உருவாகப் போகிறது. மேலும் கணவனை இழந்த விதவை பெண்களின் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு மாவட்டத்தில் அமல்படுத்தபட்ட திட்டம் இனி வரும் காலங்களில் எல்லா மாவட்டங்களிலும் இருக்கும் பெண்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.