உலகக்கோப்பையுடன் இந்தியா புறப்பட்டது இந்திய அணி – நாளை அதிகாலை டெல்லி வரவுள்ளனர் !

தற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பையுடன் இந்தியா புறப்பட்டது இந்திய அணி. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடர் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி முடிவடைந்த பின்னர் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக இந்திய அணி வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த வகையில் வீரர்களின் பாதுகாப்பு காரணமாக நாடு திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு – நிதி நெருக்கடி காரணமாக END CARD போட்ட நிறுவனம்!

இதனை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பார்படாஸில் இருந்து புறப்பட்டுள்ளனர். அந்த வகையில் நாளை அதிகாலை தனி விமானம் மூலம் டெல்லி வரவுள்ளனர். அதன் பிறகு டெல்லி வரும் இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment