இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் – IPL போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு || BCCI அறிவிப்பு !
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்:
தற்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதன் ஒரு பகுதியாக வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி இமாசலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் நடைபெறவுள்ள பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
இதனையடுத்து நேற்று (மே.09) இமாசலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த போட்டி போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு, பொது மக்கள் அனைவரும் பத்திரமாக மைதானத்தை விட்டு வெளியில் அனுப்பப்பட்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு:
அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் – துரைமுருகனுக்கு புதிய இலாக்கா ஒதுக்கீடு ! முழு விவரம் இதோ!
நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் மற்றும் டெல்லி போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.