ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை – இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!!
Breaking News: ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை: கடந்த சில மாதங்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை
இன்னும் போர் அடங்காமல் இருந்து வரும் நிலையில் தற்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ஹமாஸ் தலைவராக இருந்து வரும் இஸ்மாயில் ஹனியே ஈரான் நாட்டில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
அந்த சமயத்தில் இஸ்ரேல் திடீரென தாக்க தொடங்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் இஸ்மாயில் ஹனியேவின் மகன்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஆகஸ்ட் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
இப்படி தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தால் பாலஸ்தீனம் மயான காட்சியளிக்க ஆரம்பித்து விடும் என்று பல்வேறு கட்சினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் போரை நிறுத்தும் படி இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இஸ்ரேல் ராணுவம் செவி சாய்க்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு
TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை