இராக்கில் பெண்கள் திருமண வயது  9 ஆக குறைப்பு – நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு!

இராக்கில் பெண்கள் திருமண வயது  9 ஆக குறைப்பு: இந்தியாவில் திருமணம் செய்வதற்கு குறைந்த பட்ச வயதாக ஆண்களுக்கு 21 மற்றும் பெண்களுக்கு 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல பெரும்பாலான நாடுகளில் திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயதையே அரசு நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி குறிப்பிட்ட வயதை விட குறைவாக திருமணம் செய்பவர்களை குழந்தை திருமணமாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இந்நிலையில் ஈராக் நாடு பெண்களின் திருமண வயது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இராக்கில் பெண்கள் திருமண வயது  9 ஆக குறைப்பு

அதாவது ஈராக் நாடு தற்போது பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பெண்களின் முறைகேடான வாழ்க்கையை சரி செய்யும் விதமாக தான் இந்த முடிவை ஈராக் அரசு எடுத்துள்ளது.

பெண்ணாக மாறிய முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன் – அவரே சொன்ன தகவல்!

இதனால் பெண்கள் இளம் வயதில் கர்ப்பம் தரித்தல், கல்வி இடைநிற்றல் அபாயம் ஏற்படும். எனவே இதனை  சுட்டிக்காட்டி  மனித உரிமை குழுவினர் பெண்கள் அமைப்பினர், ஆகியோர் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாத  ஈராக் அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து மசோதாவை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் செயல்பட்டு வருகிறது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்? 

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?

ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?

Leave a Comment