லோகேஷ் பார்முலாவை கையில் எடுத்த நெல்சன்., இவருக்கு ஒர்க் அவுட்டாகுமா? ஓகே சொல்லி பற்ற வைத்த சூப்பர் ஸ்டார்!!
தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனராக இருந்து வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். LCU என்ற முறையில் தொடர்ந்து படங்களை கனெக்ட் செய்து எடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட 650 கோடி வசூல் செய்து வசூல் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தலைவர் 171 படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இவரை போல் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருந்து வருபவர் தான் நெல்சன் திலீப்குமார். இவர் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வரும் நெல்சன் தற்போது லோகேஷ் பாணியைக் கையாள இருக்கிறாராம்.
அதாவது நெல்சன் லேடி சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிய கோலமாவு கோகிலா படத்தை, ஜெயிலர் பார்ட் 2வில் இணைத்து NCU வாக உருவாக்க கதை எழுதி வருகிறாராம். இதற்கு ரஜினி ஓகே சொல்லி விட்டதால் கதை எழுவதில் அதிக மெனெக்கெட்டு வருகிறாராம். LCU பார்முலா NCU-வில் ஒர்க் அவுட்டாகுமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.