விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன்விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன்

   தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். இவரின் மகன் குறும்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆக இருக்கின்றார். விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன் ஆகின்றார் நடிகர் கவின். இந்த தகவல் வெளியானாலும் திரைப்படக்குழுவின் சார்பில் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன்

விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன்

குறும்பட இயக்குனராக அறிமுகம் :

  தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முக்கிய பிரபலமாக இருப்பவர் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் திரைப்படத்தில் ‘ நா அடிச்ச தாங்க மாட்ட ‘ என்னும் பாடலில் விஜய் உடன் நடனம் ஆடி திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் திரையுலகில் எந்த துறையில் களம் இறங்குவர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இவர் வெளிநாடு சென்று திரைப்பட துறை சார்ந்த கல்வி பயின்று “Pull The Trigger ” என்னும் குறும்படம் ஒன்றை இயக்கினார்.

திரைத்துறையில் விஜய் மகன் :

  குறும்படத்தின் மூலம் அறிமுகம் ஆனா விஜய் மகன் தற்போது தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகம் ஆக உள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ” லைக்கா தயாரிப்பு நிறுவனம் ” திரைப்படத்தினை தயாரிக்க இருக்கின்றது. லைக்கா நிறுவனம் தான் திரைப்படத்தினை தயாரிக்க உள்ளது என்ற அதிகாரப்பூர்வமான செய்தி வெளியானாலும் இசையமைப்பாளர் யார் , ஹீரோ ஹீரோயின் யார் போன்ற தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.

 பரிவர்த்தனை மூவி எப்படி இருக்கு ! முழு விமர்சனம் இதோ !

இசையமைப்பாளர் அனிரூத் :

  ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகன் ஏ.ஆர்.அமின் தான் இசையமைக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் சஞ்சய் அறிமுக இயக்குனர் என்பதால் பிரபல இசையமைப்பாளர் தான் இசை அமைக்க வேண்டும் என்று அமினை நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இறுதியாக ஜாருகனின் ” ஜவான் ” திரைப்படத்திற்கு இசை அமைத்த அனிரூத் தான் விஜய் மகனின் முதல் திரைப்படத்தில் இசையமைக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனராக முதல் படத்தின் ஹீரோ :      

  குறும்படங்கள் இயக்கி இருந்தாலும் திரையுலகில் முதல் திரைப்படம் என்பதால் யார் ஹீரோவாக நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது. வித்தியாசமான கதையாக இருக்கும் என்று சஞ்சய் கூறி இருந்தார். இதனால் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கின்றார் என்று பேசப்பட்டது. பின்னர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கின்றார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது இறுதியாக டாடா திரைப்படத்தில் நடித்த ” கவின் ” நடிக்க இருக்கின்றார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்

சீரியலில் இருந்து ஹீரோ :

  விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘சரவணன் மீனாட்சி ‘ சீரியலில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். பின்னர் அதே விஜய் தொலைக்காட்சியில் ‘ பிக் பாஸ் – 3 ‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திரைத்துறையில் படவாய்ப்புகள் வரத்தொடங்கினர். நட்புனா என்னனு தெரியுமா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இறுதியாக கவின் நடித்த ” டாடா ” திரைப்படம் பலரின் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. 

ஜேசன் சஞ்சய் முதல் படத்தில் ஹீரோ :

  லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்க இருக்கின்றார். கவின் தற்போது ஸ்டார் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பின்னர் நடன இயக்குனர் சதீஸ் இயக்கும் திரைப்படங்கள்என்ற 2 திரைப்படங்கள் கவின் கை வசம்  இருக்கின்றது. இயக்குனர் மற்றும் திரைப்படக்குழு சார்பில் கவின் தான் ஹீரோவாக நடிக்கின்றார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.  

விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன்

விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன்

படப்பிடிப்பு தொடக்கம் :

  ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் தமிழ் திரைப்படத்தில் கவின் நடிக்க இருக்கின்றார். படத்திற்க்கான முழு வேலைகளும் தற்போது நடைபெற்று வருகின்றது என்று சஞ்சய் கூறி இருந்தார். லைக்கா நிறுவனம் விரைவில் பூஜையுடன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றது என்ற தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றது. 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *