Jodi Are You Ready டைட்டில் வின்னர் 2024. Tittleஐ தட்டி தூக்கிய பிக் பாஸ் பிரபலம்… 7 லட்சம் பரிசுடன் !
Jodi Are You Ready டைட்டில் வின்னர் 2024. விஜய் டிவியில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருவது தான் ஜோடி ஆர் யூ ரெடி. இதில் சாண்டி மாஸ்டர், நடிகை மீனா மற்றும் ஸ்ரீதிவ்யா விஜயகுமார் போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள்.
Jodi Are You Ready டைட்டில் வின்னர் 2024
இந்த ஷோ தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 12 ஜோடியுடன் தொடங்கிய JodiAreYouReady நிகழ்ச்சி தற்போது 5 போட்டியாளர்களுடன் Final க்கு அடியெடுத்து வைத்துள்ளது. அதன் படி, ஜஸ்டினா – தனுஷ், விக்னேஷ் – ரவீனா, பிரியதர்ஷன் – விஜே தர்ஷிகா, வினித், கிருஷ்ண ஷில்பா, பிரஜ்வால் – ரம்யா கோல் உள்ளிட்டவர்கள் இறுதி சுற்றுக்கு சென்றுள்ளனர்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி – என்ன நடந்தது?
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜோடி ஆர் யூ ரெடி ஷோவின் டைட்டில் கோப்பையை விக்னேஷ் -ரவீனா அடித்து சென்றுஉள்ளனர். அவர்களுக்கு 7 லட்சம் தொகை பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களை தொடர்ந்து, பிரஜ்வால் – ரம்யா 2ம் இடத்தினை பிடித்து 3 லட்சம் பரிசுதொகையை பெற்றுள்ளனர். இதையடுத்து தனுஷ் – ஜஸ்டினா 3வது இடத்தினை பிடித்து 1 லட்சம் பரிசு தொகையை வாங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சி வருகிற ஞாயிற்று கிழமை 3 மணி அளவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.