கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் – சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !
தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ள நிலையில், மேலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125 க்கும் மேற்பட்டவர்கள் சேலம், பாண்டிச்சேரி, கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த கள்ளச்சாராய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. . இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அந்த வகையில் இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது… ஓயாத மரண ஓலம்?
உயர்நீதிமன்றத்தில் முறையீடு :
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கானது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.