எல்லை மீறி போறீங்கடா.., ஆப்ரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய மருத்துவர்.., அடுத்து நடந்த டிவிஸ்ட்!!

தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பு ப்ரீ வெட்டிங் ஷூட் என்ற பேரில் புது தம்பதிகள் பல சம்பவங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு மருத்துவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடகாவில்  அரசு மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நிபுணராக வேலை செய்து வருபவர் தான் டாக்டர் அபிஷேக் (30). அவருக்கு விரைவில் திருமணமாக இருப்பதால் ப்ரீ வெட்டிங் ஷூட் செய்ய விரும்பியுள்ளார்.

அதுவும் ஆபரேஷன் தியேட்டரில் மாப்பிள்ளைக்கு பொண்ணு கருவிகளை எடுத்து கொடுப்பது போல் போட்டோ ஷூட் எடுத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து அபிஷேக் மருத்துவ தொழிலை கொச்சைப் படுத்தியதாகவும், அரசு மருத்துவமனையை தவறாக பயன்படுத்தியதாகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்  சித்ரதுர்கா மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

மக்களே.., இந்த பகுதியில் 144 தடை உத்தரவு., வெடித்த கலவரம்.., 5 பேர் பலி.., என்ன நடந்தது?

Leave a Comment