இல்ல.., புரியல.., வெறும் 1.7 நிமிஷத்தில் தனது உரையை முடித்த கேரள மாநில ஆளுநர்.., ஷாக்கான சட்டமன்ற உறுப்பினர்கள்!!
ஆளுநர் உரையின் போது கேரள ஆளுநர் உரையில் உள்ள கடைசி பத்தியை மட்டும் வாசித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள சட்டசபை :
சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம் அவ்வாறு 2024 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் போது கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான் ஆளுநர் உரையில் உள்ள கடைசி பத்தியை மட்டும் பார்த்துவிட்டு தனது உரையை முடித்துக் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு, ஆளுநர் முகமது ஆரிப் கானுக்கும் சமீப காலமாக கருத்து மோதல் இருந்து வருவது குறிப்பிட தக்கது. 2024 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் தனது உரையை முழுமையாக படிக்காமல், அரசு மீதான எதிர்ப்பை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போல் தமிழ்நாடு அரசிற்கும், ஆளுநருக்கும் இடையில் அடிக்கடி கருத்து மோதல் ஏற்படுகிறது என்பது குறிப்பிட தக்கது.