கேரளாவில் போதை பொருள் கடத்திய பிரபல மாடல் அழகி – கையும் களவுமாக பிடித்த காவல்துறை -6 பேர் கைது?
கேரளாவில் போதை பொருள் கடத்திய பிரபல மாடல் அழகி: தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தலைக்கேறி உள்ளது. இதனால் பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கருகப்பள்ளி பகுதியில் இருக்கும் ஒரு லாட்ஜில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்த பேரில், அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு ரூமில் இடுக்கியை சேர்ந்த ஆஷிக் அன்சாரி(22), சூரஜ்(26), பாலக்காட்டை சேர்ந்த ரஞ்சித்(24), முகமது அசார்(18), திருச்சூரை சேர்ந்த அதுல்(18) ஆகிய 5 பேர் தங்கி இருந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி அந்த கும்பலுடன் கேரள மாநிலம் வரபுழாவை சேர்ந்த மாடல் அழகியான அல்கா போனி(வயது 22) என்ற இளம் பெண்ணும் தங்கியுள்ளார். குறிப்பாக அந்த அறையில் சோதனை செய்தபோது கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தன. இதனை தொடர்ந்து அவர்களை காவல்துறை கைது செய்தது. மேலும் போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து கேரளாவில் விற்பனை செய்து தருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தவர்களை தேடி வருகிறது. (smuggled drugs – மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் என பல வகைகள் அடங்கும்) list of drugs.
சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கு விவகாரம் – மதுரை நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சவுக்கு சங்கர் பகிரங்க மன்னிப்பு