கேரளாவில் 650 தியேட்டர்களில் வெளியாகிறது லியோ ! கேரள ஹீரோக்களை பின்னுக்கு தள்ளிய விஜய்  ! 

  கேரளாவில் 650 தியேட்டர்களில் வெளியாகிறது லியோ. விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகின்ற 19ம் தேதி வெளியாக இருக்கின்றது. கேரளாவில் லியோ திரைப்படம் மொத்தம் 650 தியேட்டர்களில் வெளியாகி சாதனை செய்ய உள்ளது.

கேரளாவில் 650 தியேட்டர்களில் வெளியாகிறது லியோ ! கேரள ஹீரோக்களை பின்னுக்கு தள்ளிய விஜய்  ! 

கேரளாவில் 650 தியேட்டர்களில் வெளியாகிறது லியோ

கேரளாவில் விஜய் ரசிகர்கள் :

  கேரளாவில் இருக்கும் மக்கள் அதிகளவில் ரசிக்கும் தமிழ் நடிகர்களில் முதல் இடத்தில் இருக்கின்றார் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாட்டை பார்க்கும் போது பெண் ரசிகர்கள் கேரளாவில் அதிகம். மலையாள நடிகர்களுக்கு இணையாக விஜய் படங்கள் வசூலில் சாதனை செய்யும். விஜய் திரைப்படங்கள் மலையாள மொழியில் டப்பிங் செய்யாமல் வெளியாகும். 

JOIN WHATSAPP CHANNEL

லியோ & கேரளா :

  இதற்க்கு முன் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் , வாரிசு போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வசூல் சாதனை கேரளாவில் செய்யவில்லை. கேரளாவில் லியோ திரைப்படத்தின் ரசிகர் காட்சிகள் டிக்கெட்டுகள் முதல் நாளில் சில மணி நேரங்களில் விற்பனை ஆகி விட்டதாம். ரசிகர்கள் மத்தியில் லியோ லோகேஷ் விஜய் கூட்டணியில் இரண்டாவது திரைப்படம் என்பதால் கேரளா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது.

650 தியேட்டர்களில் லியோ :

  கேரளாவில் மட்டும் லியோ திரைப்படம் வருகின்ற 19ம் தேதியில் மொத்தம் 650 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கேரளாவில் மொத்தம் 3,000க்கும் அதிகமான காட்சிகள் வெளியிட உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி படத்தில்  இரட்டை வேடங்களில் அஜித் ! இது வேற லெவல் அப்டேட் 

கேரளாவில் லியோ சாதனை :

  கேரளாவில் மோகன்லால் மற்றும் மம்முட்டி போன்ற மலையாள நடிகர்களுக்கு ரசிகர்கள் அதிகம். இவர்களின் திரைப்படங்கள் மட்டுமே கேரளாவில் அதிகளவு தியேட்டர்களில் வெளியாகும். ஆனால் விஜயின் லியோ திரைப்படம் மலையாள நடிகர்களை தாண்டி அதிக தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படமாக சாதனை செய்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் லியோ திரைப்படம் வெளியாக இருக்கின்றது. LCU மற்றும் லோகேஷ் இயக்கம் என்பதை கடந்து விஜய் நடித்து இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. லியோ திரைப்படம் வசூல் சாதனை செய்யும் என்பதில் ஆச்சரியமில்லை.  

Leave a Comment