மதுரை – கோவை மெட்ரோவிற்கு முன்னுரிமை – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் !

தற்போது மதுரை – கோவை மெட்ரோவிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் இன்று சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அந்த வகையில் சென்னை புறநகர் ஒட்டிய முக்கிய பகுதியான விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கும் மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களான,

தீபாவளி 2024 மளிகைப் பொருட்கள் சிறப்பு தொகுப்பு – அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! இவ்வளவு இருக்கா?

கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான செயற்குறிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment