மதுரை வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025: மதுரை மாவட்ட வருவாய் அலகு, திருப்பரங்குன்றம் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Madurai Village Assistant Recruitment 2025:
Madurai Jobs | Details |
---|---|
விண்ணப்பம் பெறப்படும்நாள் | | 17.10.2025- முதல் |
விண்ணப்பம் அளிப்பதற்கான இறுதி நாள் | 15.11.2025 மாலை 5.45 மணிக்குள் |
பதவியின் பெயர் | கிராம உதவியாளர் |
ஊதிய விகிதம் | ரூ.11,100-35,100/- |
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 06 |
வயது:
குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும் (அனைத்து பிரிவினருக்கும்)
Official Notification Download
அதிக பட்சம் வயது:
பொது பிரிவினர் – 32 வயது
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC)/ BC(M)/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC)/ சீர்மரபினர்(DNC) வகுப்பினர் – 39 வயது
பட்டியல் ஆதரவற்ற இனத்தவர் (SC) /(SC(A) / பழங்குடியினர் (ST) / விதவை – 42 வயது
Also Read: TN TRB Assistant Professor ஆட்சேர்ப்பு 2025 [2708 பணியிடங்கள்] அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
அரசாணை (நிலை) எண்: 91,மனிதவள மேலாண்மைத் (எஸ்) துறை நாள்:13.09.2021-ன்படி மற்றும் அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்,எண்:636/பணி 8 (1)/2025, நாள்:18.09.2025-ன்படி வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில் (SSLC Secondary School Leaving Certificate Examination) தமிழ் ஒரு பாடமாக கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும்.
(குறிப்பு- SSLC-Secondary School Leaving Certificate Examination) மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்).
Thirupparangunram Village Assistant Application Form
இதர தகுதிகள்:
- மிதிவண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன்.
- வாசித்தல் மற்றும் எழுதும் திறன்(தமிழில்)
- சம்பந்தப்பட்ட கிராமம்/ தாலுகா (திருப்பரங்குன்றம் வட்டம்) எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். (நாளது தேதியின்படி தாலுகா வரம்பிற்குட்பட்டு) (தற்போதைய முகவரியிச் சான்றுடன்).
விண்ணப்பங்கள் மதுரை மாவட்ட ஆட்சியரின் அலுவலக இணையவழி முகவரியான https://madurai.nic.in-இல் பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் 15.11.2025 அன்று மாலை 5.45 மணிக்குள்அனுப்பி வைத்திட வேண்டும். அதற்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களை எக்காரணம் கொண்டும் ஏற்றக்கொள்ளப்பட |மாட்டாது. தமிழ்நாடு கிராம உதவியாளர் பணியமைப்பு விதிகளின்படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.