மலையாளத்தில் வரலாற்று சாதனையை படைத்த முதல் படம்., 200 கோடியை தாண்டிய “மஞ்சும்மல் பாய்ஸ்” வசூல்!!
கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பற்றி எடுக்கப்பட்டு கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் “மஞ்சும்மல் பாய்ஸ்”. குணா குகையில் உள்ள குழிக்குள் விழுந்த நண்பனை சக நண்பர்கள் துணிச்சலுடன் காப்பாற்றியதை மையமாக எடுக்கப்பட்டதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் சக்க போடு போட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்படத்தில் இடம் பெற்ற “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல” என்ற பாடல் இடம் பெற்றிருந்த நிலையில், தமிழக ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முழு வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 25 வது நாளைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த “மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படம் உலக அளவில் 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதை படக்குழு கொண்டாடி வருகின்றனர்.