விஜய் கட்சி குறித்து கடுமையாக விமர்சித்த மன்சூர் அலிகான்.., அப்படி என்ன தான் சொல்லிருக்காருன்னு தெரியுமா?
தமிழ் தேசிய புலிகள் கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய கட்சி பெயரை ஜனநாயக தேசிய புலிகள் என்று பெயரை மாற்றி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொதுவாக நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஈடுபாடில்லை. அப்புறம் ஏன் நான் வருகிறேன் என்று கேட்கலாம். நான் படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே அரசியல் போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன்.எனவே பல்லாவரத்தில் மாநாடு நடத்த இருக்கிறேன்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
பல்லாயிரம் கணக்கான இளைஞர்கள் என் கட்சியில் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து பேசிய அவரிடம், விஜய் ஆரம்பித்துள்ள “தமிழக வெற்றி கழகம்” கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், அவரிடம சேர்ந்து நீங்கள் கூட்டணி வைக்கலாமே என்று கேள்வி எழுப்பியதற்கு, அவர், முதல கல்யாணம் பண்ணோணு, அப்புறம் தான் முதலிரவு பற்றி பேசலாம் எனத் தெரிவித்துள்ளார். விஜய் கட்சியை குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.