மயிலாடுதுறையில் காலாவதியான பீர் அருந்திய இருவருக்கு உடல்நலக்குறைவு – டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!
மயிலாடுதுறையில் காலாவதியான பீர் அருந்திய இருவருக்கு உடல்நலக்குறைவு: தமிழகத்தில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மது பிரியர்கள் ஹாட் அடிப்பதை நிறுத்தி விட்டு பீர் அடிக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பீர் குடித்து இருவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மயிலாடுதுறை மாவட்டம் காரைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (31) மற்றும் சார்லஸ் (27). இவர்கள் இருவரும் நேற்று தென்னலக்குடியில் இருக்கும் அரசு டாஸ்மாக் கடையில் டின் பீர் வாங்கி குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
வீட்டிற்கு சென்ற கொஞ்ச நேரத்தில் அந்த இரண்டு பேருக்கும் வாந்தி, மயக்கம்,பேதி ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களை மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் குடித்த பீர் காலாவதியாகி இருக்கலாம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த பீர் டின்களை சோதனை செய்த போது அந்த கேன்கள் கடந்த ஜனவரி மாதமே காலாவதி ஆகிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தென்னலக்குடி டாஸ்மாக் கடையில் தட்டி கேட்டனர். ஆனால் உரிய விளக்கம் கொடுத்ததால் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.