உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்கிறாரா? இணையத்தில் வெளியான முக்கிய தகவல்!!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் விளங்கி கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் இப்பொழுது விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்று சிறப்பாக செயலாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து நடக்க இருக்கும் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள 40 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். மேலும் கடந்த சில நாட்களாக அவர் துணை முதலமைச்சர் பதவி ஏற்பதாக தகவல் வெளியாகிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் எம்.எல். ஏ உதயநிதி ஸ்டாலின் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வருகிற ஜனவரி 21ம் தேதி இளைஞர் அணி மாநாடு நடந்து முடிந்த சில நாட்களில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் கட்சி மீட்டிங்கில் பேசப்பட்டு வருவதாகவும், அதற்கு மற்ற உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழா முதல்வர் முக ஸ்டாலின் ஜனவரி 28ம் தேதி வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில், அதற்கு முன்னர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என சில அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர். 

Leave a Comment