கல்யாணம் செய்யாததற்கு இது தான் காரணம்? உண்மையை உடைத்த மும்தாஜ்!!

நடிகை மும்தாஜ் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கும் காரணம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

தென்னிந்திய தமிழ் சினிமாவில்  90ஸ் கிட்ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை மும்தாஜ். மோனிஷா என் மோனலிசா படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அவர், அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி அவரது கவர்ச்சியான நடனம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. அதன்படி, அவர் மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சாக்லேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, கவர்ச்சி பிரபலமாகவும் மாறினார்.

குறிப்பாக குஷி படத்தில் விஜய்யுடன் சேர்ந்து “கட்டிப்புடி கட்டிப்புடிடா” என்ற பாடலுக்கு மிகவும் கிளாமராக நடனமாடி இன்றும் மறக்க முடியாத நடிகையாக இருக்கிறார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்ட போது அவருக்கு நோயால் அவதிப்பட்டு வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் தனது கல்யாணம் குறித்து பேசியுள்ளார். அதாவது நடிகை மும்தாஜ், 25 வயதாக இருக்கும் போது ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. அப்போது தான் அவரால் திருமண வாழ்வில் இருக்க முடியாது என்பதை உணர்ந்த அவர் திருமணம் செய்யாமல் இருப்பதாக கூறியுள்ளார்.

இனிமேல் பள்ளிகள் இந்த நேரத்தில் தான் இயங்கும்.., புதிய மாற்றத்தை கொண்டு வந்த பள்ளிக்கல்வித்துறை!!

Leave a Comment