பூர்விக சொத்து வாங்க போறீங்களாபூர்விக சொத்து வாங்க போறீங்களா

பூர்விக சொத்து வாங்க போறீங்களா ஒருவருக்கு வாழ்வில் பெரிதும் மகிழ்ச்சியை தருவது சொத்துக்கள் வாங்கி தலைமுறைக்கு சேர்த்து வைப்பது தான். அத்தகைய சொத்துக்கள் வாங்கும் போது நாம் மிகவும் கவனமாக வாங்க வேண்டும். அதிலும் ஒருவர் பூர்விக சொத்து வாங்க போகின்றார் என்றால் அதில் பல சிக்கல்கள் இருக்கும். பூர்விக சொத்து வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டியவை மற்றும் சொத்து பத்திரத்தில் இருக்கும் வில்லங்கம் கண்டறிவது எப்படி அவைகளில் ஆரம்பத்தில் எப்படி சரி செய்யலாம் போன்ற அனைத்து முறைகளை அறிந்து கொள்ளலாம்.

பூர்விக சொத்து வாங்க போறீங்களா

பூர்விக சொத்து வாங்க போறீங்களா

ஆய்வு செய்ய வேண்டிய ஆவணங்கள் :

 1. EC 

1. EC ( Encumbrance Certificate ) :

  நாம் எந்த ஒரு சொத்து வாங்க போகின்றோம் என்றால் முதலில் EC தான் பார்க்க வேண்டும். EC என்பது வில்லங்க சான்றிதழ் என்பது பொருள். இந்த சான்றிதழ் மூலம் நாம் வாங்கும் நிலம் யார் பெயரில் இருக்கின்றது , இதற்கு முன்னர் இந்த நிலத்தின் உரிமையாளராக யார் யாரெல்லாம் இருந்துள்ளனர் என்ற விவரங்களை முழுமையாக தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 

பூர்விக சொத்து வாங்கும் போது எதிர்கொள்ளும் சிக்கல் :

   பூர்விக சொத்தினை ஒருவர் வாங்கி எப்படி சிக்கலை சந்திக்கின்றார் என்பதற்கு ஒரு உதாரணம் . மாரியப்பன் என்னும் ஒருவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். மாரியப்பனுக்கு தன் மகன்களுக்காக சொத்துக்களை வாங்குகின்றார். 

முதல் மகன் வேலையின் நிமித்தம் வெளியூர் சென்று விடுகின்றார். ஆனால் அவர் எங்கு இருக்கின்றார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இரண்டாவது மகன் இறந்து விடுகின்றார்.

 மூன்றாவது மகன் தன் தந்தையுடன் வாழ்ந்து வருகின்றார். வயது மூப்பின் காரணமாக மாரியப்பன் இறந்து விடுகின்றார். முதல் மகன் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. 

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்

இரண்டாவது மகன் இறந்து விடுகின்றார். மாரியப்பன் சொத்து பற்றி ஏதும் உயில் எழுதி வைக்காததால் மூன்றாவது மகன் தன் தந்தை மற்றும் இரண்டாவது மகன் இருவருக்கும் இறப்பு சான்றிதழ் மற்றும் மூன்றாவது மகன் பெயரை மட்டும் வாரிசு சான்றிதழில் போட்டு  வாங்கிக் கொண்டு தன் ஒருவர் மட்டும் தான் வாரிசு என்பதை பதிவு செய்து வாரிசு சான்றிதழ் வாங்கி விடுகின்றார். 

மாரியப்பன் சொத்துக்களை மூன்றாவது நபர் யாரோ ஒருவருக்கு விற்று விடுகின்றார். தற்போது வரையில் மாரியப்பன் சொத்துக்களை வாங்கிய நபருக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. 

ஆனால் முதல் மகன் வந்து இது என் தந்தையின் சொத்து நீங்கள் என் பங்கை திருப்பி கொடுக்கல் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விடுவர். நீதிமன்ற வழக்கிற்கும் நிலம் வாங்கியவருக்கு சம்மந்தம் கிடையாது. ஆனால் நிலம் விற்ற அதாவது மாரியப்பன் மூன்றாவது மகன் தான் நஷ்டஇடு வழங்க வேண்டும். 

சிக்கல்களை தவிர்ப்பது எப்படி :

 1.ஒரு நிலம் வாங்குகின்றோம் என்றால் முதலில் EC போட்டுப் பார்த்து தான் வாங்க வேண்டும்.                 

2. EC ல் இருக்கின்ற வாரிசு பெயர்களை நன்கு கவனிக்க வேண்டும். 

 3. நிலம் விற்பவரின் வாரிசில் இருக்கும் பெயர்களில் ஒருவர் இறந்திருந்தால் இறப்பு சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும். 

4. வாரிசில் இருக்கும் நபர் உயிருடன் இருக்கின்றார் என்றால் அவரிடம் ” இந்த சொத்திற்கு நான் உரிமை கோர மாட்டேன் ” என்ற எழுதி வாங்குவது நல்லது. 

பத்திரம் பதியும் பொது கவனிக்க வேண்டியவது :   

 1. EC பார்த்து நில பத்திரத்தில் ஏதும் வில்லங்கம் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பத்திரம் பதிவு செய்ய வேண்டும். 

 2. பத்திரம் பதிவு செய்யும் போது முக்கியமாக யாருடைய சொத்து யாரிடம் இருந்து வாங்குகின்றேன் என்பது தெளியாக பதிவாகி உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். 

3. ஒருவரிடம் இருந்து சொத்து வாங்கும் வாங்கும் வாரிசுகள் அனைவரும் சாட்சி கையெழுத்து போடுவது நல்லது. 

பூர்விக சொத்து வாங்க போறீங்களா

பூர்விக சொத்து வாங்க போறீங்களா

      சொத்துக்கள் வாங்குவது என்பது பலருக்கும் கனவாக இருக்கக்கூடிய ஒன்று. எனவே EC பார்த்து அதில் இருக்கும் வில்லங்கம் இருந்தால் சரி செய்து பின்னரே வாங்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற சிக்கல்களை முதலிலேயே பார்த்து நாம் வாங்கும் போது சொத்து வாங்கிய பின் ஏற்படும் பல சிக்கல்களை தடுக்க முடியும். 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *