Neet அட்மிட் கார்டு 2024 : நீட் தேர்வு  ஹால் டிக்கெட் வெளியீடு? – பதிவிறக்கம் செய்ய இத பண்ணுங்க?

Neet அட்மிட் கார்டு 2024 : நீட் தேர்வு  ஹால் டிக்கெட் வெளியீடு?- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேருவதை பெரிய கனவாக வைத்துள்ளனர். ஆனால் அப்படி மருத்துவ கல்லுரியில் சேர வேண்டும் என்றால், முதலில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வால் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்து வருகின்றனர். சிலர் இந்த தேர்வை எழுதி தோல்வியுற்றாலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதன்படி, வருகிற மே 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இதனால் மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு குறித்து முக்கியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, நீட் தேர்வுக்கான நுழைவு சீட் இன்று https://exams.nta.ac.in/NEET/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படுகிறது. எனவே மாணவர்கள் இதன் மூலம் தங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. 

காதல் கோட்டை பாணியில் காதலித்த இளைஞர் – நேரில் பார்த்ததும் காதலியை தாக்கிய சம்பவம் – என்ன நடந்தது?

Leave a Comment