விஜய் டிவியில் இருந்து வேறொரு டிவிக்கு தாவிய நீயா நானா கோபிநாத்?.., என்னவா இருக்கும்?.., ரசிகர்கள் ஷாக்!!
விஜய் டிவி நீயா நானா கோபிநாத்
விஜய் டிவியில் மக்களுக்கு பிடித்த தொகுப்பாளராக இருந்து வருபவர் தான் நீயா நானா கோபிநாத். இவர் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா ஷோ கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் அவர் பேசும் பேச்சுகள் என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நீண்ட வருடங்களாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் நீயா நானா கோபிநாத் தற்போது வேறு சேனலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, நடப்பாண்டில் நடக்க இருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL போட்டி Star Sports தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், அந்த டிவியில் புதிய தொகுப்பாளராக கோபிநாத் இணைந்துள்ளார். ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி மாஸ் காட்டி வரும் நிலையில், தற்போது கலகலவென பேசும் கோபிநாத் இணைந்து விட்டதால் இனி போட்டிகள் விறுவிறுப்பாக போகும் என கூறப்படுகிறது. இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.