நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… 63 பயணிகள் உயிருக்கு ஆபத்தா?

Breaking News: நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக விளங்கி வரும் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக இப்படி கேப்  விடாமல் பெய்து வரும் கனமழையால் நேபாளத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓட தொடங்கியது.

இதனால் மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இன்று அதிகாலை  3.30 மணியளவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த இரண்டு பேருந்துகளிலும் கிட்டத்தட்ட 63 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

தற்போது அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலைக்கும், பயணிகளின் நிலை என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் மீட்பு படையினர் களத்தில் இறங்கிய நிலையில் பயணிகளை தேடும் பணியில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். மேலும் பயணிகளின் நிலை குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: பெற்றோர் மாமனார் மாமியாரை பார்த்துக்கொள்ள சிறப்பு விடுமுறை – அசாம் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தற்போது அங்கு கனமழை அதிகமாக பெய்து வருவதால் மீட்பு படையினர் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கனமழையால் காத்மாண்டு – பரத்பூர் மற்றும் சித்வான் பகுதிகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மழை ஓய்ந்த பிறகே 63 பயணிகளின் கதி என்ன என்பது குறித்து தெரிய வரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

nepal – trishuli river – kathmandu – bharatpur – flights – cancelled

Leave a Comment