திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து உடனடியாக பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு வந்த ஆம்னி பேருந்து சாலையில் திடீரென விபத்துக்குள்ளாகி பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, திருச்சி மாவட்டம் மன்னார்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து பேருந்து தீப்பற்றி எரிவதை அறிந்து உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: ஒரு கோடி நிதியுதவி வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு!!

இதனை தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் ஏதும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. அத்துடன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Leave a Comment