பழனி முருகன் கோவிலில் மே 30 ஆம் தேதி ரோப் கார் வசதி ரத்து – கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

பழனி முருகன் கோவிலில் மே 30 ஆம் தேதி ரோப் கார் வசதி ரத்து. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வெளிநாடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் பழனி மலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக அங்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் மலையில் உள்ள படிக்கட்டு வழியாக ஏறி செல்ல முடியாத வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் சுலபமாக மலை மேல் சென்றடைய ரோப் கார் வசதி பெரிதும் உதவியாக உள்ளது.

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024 ! 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை மறுநாள் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் படிப்பாதை அல்லது வின்ச் சேவையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment